- Get link
- X
- Other Apps
விடுதலைப் புலிகளுக்கு நிதி : விடுதலைப் புலிகளுக்கு 15 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்க்களுக்கு அதிகமாக (15.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதி திரட்டி அனுப்பியதற்காக 13 நிதியாளா்கள் மீது விசாரணை சுவிஸ் பெடரல் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்களன்று துவங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஸ்ரீலங்காவிலிருந்து வந்தவர்கள் என சுவிஸ் செய்தி நிறுவனம் SDA தெரிவித்துள்ளது. இவா்கள், 1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், தமிழ் புலம்பெயர்ந்தோரை வங்கியிலிருந்து கடன் பெற நிா்பந்தப்படுத்தி ஒரு சிக்கலான நிதி திரட்டும் கட்டமைப்பை உருவாக்கினாா்கள். பணமோசடி : இந்த 13 நபர்கள் மீது மோசடி, பொய்யான ஆவணங்கள், பணமோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் LTTE ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படவில்லை, எனவே இவர்கள் ஒரு பயங்கரவாதக் குழுவுக்கு நிதியுதவி அளித்ததாக கருதப்படமாட்டார்கள். " புலம்பெயர்ந்த தமிழா்களை அச்சுறுத்தியும், அவா்கள் மத்தியில் ஒரு வித பயத்தை தோற்றுவித்தும் பணத்தை சேகரித்து அண...